அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் புதுதெருவை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரணை செய்தனர். அதில் அதே பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் தான் காரணம் என சொல்லியிருக்கிறார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி விசாரனை மேற்கொண்டார். மேலும் மாணவியிடம் விசாரனை நடத்தி வாக்குமூலம் பெற்றார். இதில் மாணவியை 9 ம் வகுப்பு மாணவன் கர்ப்பாகியுள்ளதும், அதற்கு காரணம் 9ம் வகுப்பு மாணவன் தெரியவந்தது. இதனையடுத்து போக்சோவின் கீழ் கைது செய்த ஆய்வாளர் சுமதி ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவனை திருச்சி சிறுவர் சிர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மாணவிக்கு அரியலூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.