திருச்சி மாவட்டம், நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லூதுசாமி என்பவர் மகன் ஜோசப். சமூக ஆர்வலர் ஆன இவர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, குளம், ஏரி போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு புகார்களை மாவட்ட நிர்வாகத்திடம் புகாராக வழங்கி வந்தார். இது தொடர்பாக ஆத்திரம் அடைந்த சிலர் அவரை கடந்த மாதம் 16ஆம் தேதி தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஜோசப் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரியில் தன்னை தாக்கிய ரோஷன், சீமோன், அருள், தேவராஜ், ஞானசேகரன், ஆரோக்கியராஜ், ஹவுசிக் ஆகியோர் தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். ஆனால், இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இவர்
மீது 19ஆம் தேதி பொய் வழக்கு தொடுத்து கைது செய்வதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீன் உள்ளார். இன்று இவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு திடீரென தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சித்தார். இதனைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் இடத்தில் அழைத்துச் சென்றனர். புகார் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.