திருச்சி மாநகரில் கடந்த 27.09.23-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து பூக்கடை நடத்தி வரும் ஒருவரை முன்விரோதம் காரணமாக, ஆபாசமாக திட்டியும் அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய ஸ்ரீரங்கம், ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த படையப்பா (எ) ரெங்கராஜ் 43/23 த.பெ.மாரிமுத்து என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
எனவே படையப்பா (எ) ரெங்கராஜ் என்பவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் விசாரணையில் தெரியவருவதாலும் . படையப்பா தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி படையப்பாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள படையப்பாவுக்கு பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றசம்பங்களில் ஈடுபடுவதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்..