திருச்சி அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ள காதலனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தை சேர்ந்த வர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கணவன் குடும்பத்தை விட்டு விட்டு போய்விட்டாார். அதன் பிறகு அந்த பெண் 2வது திருமணம் செய்தார். அந்த கணவனும் சில மாதங்கள் விட்டு விட்டு போய்விட்டார்.
இந்த நிலையில் திருச்சி மணிகண்டம் நாகமங்கலம் பழைய ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் இவரது மகன் சிவா (எ )சிவகுமார் (22) என்பனுக்கும் அந்த சிறுமியின் தாய்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த சிவா அந்த சிறுமியிடம் உனது தாயை விட்டு விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பழகியதோடு அடிக்கடி அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாய்க்கு தெரிய வந்ததும் உடனடியாக இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவா ( எ ) சிவகுமாரை கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிவா கூலி வேலை செய்து வந்தார்.