சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாமக தலைவர் அண்புமனி ராமதாஸ், பொதுமக்களிடம் திமுக எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்தும், பமக வின் திட்டங்கள் குறித்தும் விளக்கிக்கொண்டிருந்தார் அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால், ஜெயக்குமார் இதற்காகவே தன்னை தயாரித்து வந்தது போல், 1988ல் நாங்கள் தான் பாமகவுக்கு இடம்கொடுத்தோம் என்றும், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார்.
அன்புமணி ராமதாஸ் நாடாளுமன உறுப்பினரானதற்கு இவர் எப்படி காரணம்… உடன்படிக்கையின்படி நாடாளுமன்றத்திற்கான இடம் பாமகவுக்கு வழங்கப்படுகிறது. பாமகவில் யாருக்கு இடம் கொடுப்பது என்பது பாமக முடிவுசெய்து, பொதுக்குழு நடத்தி அன்புமணி ராமதாசுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் 1996 ஐ ஜெயக்குமார் சற்று திரும்பிப்பார்க்கவேண்டும். 1996 தேர்தலில் அதிமுக பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை, 4. பாமக தனித்து நின்று பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4. அதிமுக பலவீனமடைந்தபோது, மறைந்த ஜெயலலிதா அவர்கள் எங்களிடம் கூட்டணி வைத்தபோது தான் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றனர். அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது.
அதேபோல, 2001 தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். நாங்கள் எப்போதும் எங்களால் தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார். எங்களால் தான் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார், ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பாமக தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்கள் வைக்கும் போது சற்று கவனமாக வைக்கவேண்டும்.
இதை ஜெயக்குமாரின் தனிப்பட்ட கருத்தாக பாமக எடுத்துக்கொள்கிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன் தான் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.