Skip to content

திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

  • by Authour

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர் கே வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவராக இருக்கிறார்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்..இன்று காலையில் வினோத் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்தனர்.அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ஒரு லட்சம்  ரொக்கப்பணம் மற்றும் பொருள்கள் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட பாமக செயலாளர் உமாநாத்,மாவட்ட அமைப்பு தலைவர் வினோத் மற்றும் நிர்வாகிகள் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்

மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.உறையூர் மெயின் ரோட்டில் நடந்த இந்த  கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீக்கடையில் கொள்ளை….

இதேபோல் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!