அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது 152 படுகைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது எனினும் இம்மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிலை பணிகளில் 251 பணியிடங்களில் 119 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது குறிப்பாக மருத்துவர்கள் மட்டும் 50 பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் 18 மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது அதேபோல் 135 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 51 செவிலியர்கள் மற்றும் 77 துப்புரவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 34 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேவையான அனைத்து பணியிடங்களையும் உருவாக்கி அதனை நிரப்பிட வேண்டும் மருத்துவமனை விரிவாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அனைத்து உள்கட்டமைப்புகளுடன் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோ கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.