கல்வி மற்றும் வேலைவாய்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆளும் திமுக அரசு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி பாமகவினர் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரத்தில்நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்
முன்னாள் மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர், வாணி ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர் கமல், நகர செயலாளர் ஜாகிர் உசேன், தொழிற்சங்க செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பாமகவினர் கலர் கலந்து கொண்டனர்.