Skip to content
Home » தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி அறிவிப்பு..

தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி அறிவிப்பு..

  • by Senthil

தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு சவுமியா அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை வெளியான பாமக வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி தொகுதிக்கு அரசாங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர். இந்த நிலையில் மாலையில் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு தர்மபுரி தொகுதியில் அரசாங்கத்திற்கு பதிலாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தொகுதியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பதால் இந்த மாற்றம் என பாமக தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!