Skip to content
Home » நள்ளிரவு பாமக நிர்வாகி கொலை.. அதிகாலை குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..

நள்ளிரவு பாமக நிர்வாகி கொலை.. அதிகாலை குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..

  • by Senthil

செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர் நாகராஜ். இவர் செங்கல்பட்டு மாவட்ட பாமக நகரச் செயலாளராக இருந்துள்ளார். மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த நாகராஜ், இன்று இரவு வழக்கம் போல இரவு 9 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜன் அப்படியே சரிந்தார். மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி தாக்குதல் நடத்தியதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் இப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருக்கிறது.  இந்த சம்பவத்தை கண்டித்து நாகராஜீன் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று அதிகாலை பாமக நிர்வாகி கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட அஜித்(27) என்பவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் அஜய்யை துப்பாககியால் சுட்டு பிடித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!