மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனகர்த்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்… சூரியனார்கோவில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரிடம் கேட்டதற்கு மதுரை ஆதீனம் கூறியதாவது: தம்பிரான்கள் ஆதீன கர்த்தர்களுக்கு கட்டுப்பட்டவர்கள், நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். நான் தருமபுரம் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டவன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது ஆதினகர்த்தர்கள்தான்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதே என்ற கேள்விக்கு அதெல்லாம் வீழ்ச்சி அடையாது. எங்கள் ஆள் மோடி பொருளாதார சரிவை நிறுத்தி விடுவார், ஸ்ட்ராங்கான ஆள். சைனாவே பின்வாங்கி விட்டது. ஜவஹர்லால் நேரு கோட்டை விட்டதை மோடி நிமிர்த்தி விட்டார்.
ஒரு மடத்தைப் பற்றி இன்னொரு மடத்தில் கருத்து சொல்லக்கூடாது. அவர்கள் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்களே தீர்வு சொல்வார்கள் என்றார். அவர் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.