கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழக அரசும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியது.
நிலச்சரிவால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி நாளை மறுநாள்(10ம் தேதி) வயநாடு செல்கிறார். நிலச்சரிவு நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு நிவாரண நிதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.