முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) நேற்று இரவு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டில்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோர் சென்று மன்மோகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். நாளை மன்மோகன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.