Skip to content
Home » 543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தேஜ கூட்டணிக்கு தான் ஓட்டு போட்டனர். மக்கள் எங்களின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து ஓட்டு போட்டனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையே மகேசன் சேவை என நாங்கள் செயல்பட்டதை அங்கீகரித்து உள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் பிதற்றி வருவது கண்கூடாக தெரிகிறது. இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே வியந்து வருகிறது.10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ள எமது அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். எக்காரணத்தை கொண்டும் ஊழலை சகித்து கொள்ள முடியாது.
இந்தியாவுக்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம். இந்தியாவின் மதிப்புசர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.ஓட்டு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். இது நாட்டை நாசப்படுத்தியது அனைவருக்குமான நீதி என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தான் இந்த நாட்டை அழித்து கொண்டு இருந்தது. இதின் காரணமாக இந்துக்களை தீவிரவாதிகள் என குறிப்பிடுகின்றனர். இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம் இது. இந்த அரசியலுக்கு இம்முறை மக்கள் முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர். ஊழலுக்கும், திருப்திபடுத்தும் அரசியலுக்கும் மக்கள் முடிவு கட்டினர். எதிர்வரும் தலைமுறைக்கு வலிமையான பாரதத்தை உருவாக்குவதன் மீதே எங்களின் கவனம் உள்ளது. உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது. வளர்ச்சியடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தனர். 2047 ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார். அதுனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி பதிலுரையை துவங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் போட்டபடியே இருந்தனர். ‛மணிப்பூர்… மணிப்பூர்…’ எனவும், நீதி வேண்டும் எனவும், கோஷம் போட்டதுடன் மேஜையை தட்டினர். மணிப்பூர் குறித்து பதிலளிக்க வேண்டும் என இடையூறு ஏற்படுத்தும் கோஷம் போட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‛‛ எம்.பி.,க்கள் அனைவரும் அவை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தில் பேசுங்கள். பிரதமர் பேச்சின் போது எதிர்க்கட்சியினரின் அமளி மிகவும் தவறான செயல் என கண்டித்தார். பேசும் போது பிரதமர் மோடி ஒரு குட்டி கதையை கூறினார். சக மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய மாணவனிடம் எதற்காக என ஆசிரியர் கேட்டார். நான் 99 மார்க் வாங்கியிருக்கிறேன் என அந்த மாணவன் பதில் அளித்தான். அவன் 100க்கு 99 வாங்கவில்லை 543க்கு 99 மார்க் வாங்கி பெயில் ஆகியிருக்கிறான் என்பதை எப்படி புரியவைப்பது. சிறுபிள்ளைத்தனமாக அடுத்தவரை பற்றி குறை சொல்லும் நபர்களை என்னவென்று சொல்வது என ராகுலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!