நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இந்த ஆண்டில் ஏற்கனவே 4 முறை தமிழகம் வந்துள்ளார். ஜனவரி 2ம் தேதி திருச்சி விமான நிலையம் மற்றும் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியை தொடங்கி வைத்து விட்டு மறுநாள் திருச்சி திருவரங்கம், ராமேஸ்வரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் பொதுக்கூட்டம், மதுரை மீனாட்சி் அம்மன் கோயில் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 28ம் தேதி தூத்துக்குடி, நெல்லை பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். மார்ச் 4ம் தேதி கல்பாக்கம், சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இதுவரை 4 முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி மீண்டும் 3 முறை தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். குறிப்பாக பாஜக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியை தேர்வு செய்து அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க திட்டமிட்டு உள்ளார்.
அதன்படி அவர் வரும் 15ம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து சேலம் வந்து பிரசாரம்் செய்து விட்டு கேரள மாநிலம் காலக்காடு செல்கிறார்.
16ம் தேதி பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் பிரசாரத்தை முடித்து விட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மற்றும் ஷகீராபாத் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
17ம் தேதி கேரள மாநிலம் பத்தினம்திட்டா, நர்நாடக மாநிலம் ஷிமோகா, ஆந்திர மாநிலம் அமராவதி ஆகிய இடங்களில் பி்ரசாரம் செய்கிறார். அமராவதியில் என்டிஏ கூட்டணி கட்சியினரின் பேரணியில் பிரதமர் பங்கேற்கிறார்.
18ம் தேதி காலை கர்நாடக மாநிலம் மல்காஜ்பிரி, ஷிமோகா, ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு கோவை வருகிறார். கோவையில் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார். 19மட் தேதி நாகர்கர்நூல், தார்வாட், எலுரு ஆகிய இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார்.