Skip to content

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

பிரதமர் நரேந்​திர மோடி  நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பிரதமரை அன்​புடன் வரவேற்​றார்.

பின்​னர் ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​தில் ஸ்மிருதி மந்​திரில் உள்ள அந்த அமைப்​பின் நிறு​வனர் ஹெட்​கேவர் நினை​விடத்​துக்​குச் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். அப்​போது, இந்​தி​யா​வின் அழி​யாத கலாச்​சா​ரத்​தின் ஆலமரம் இந்த ஆர்​எஸ்​எஸ் சங்​கம் என்று கூறி​னார்.

ஸ்மிருதி மந்​திரில் அமைந்​துள்ள ஆர்​எஸ்​எஸ் நிறு​வனர் கேசவ் பலி​ராம் ஹெட்​கேவர் மற்​றும் எம்​.எஸ். கோல்​வால்​கர் நினை​விடங்​களுக்​கும் சென்று பிரதமர் மோடி மரி​யாதை செலுத்​தினார். அப்போது ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் உடனிருந்​தார்.
  இந்த சந்திப்பின்போது பாஜகவின் புதிய தலைவர் தேர்வு குறித்து அவர்கள் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கு நேற்று பயணம் மேற்​கொண்ட பிரதமர் மோடி அங்கு பி.ஆர். அம்​பேத்​கருக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்னர், அவர் கூறிய​தாவது: சமூக நீதி மற்​றும் ஒடுக்​கப்​பட்ட மக்​களுக்கு அதி​காரமளிக்​கும் சின்​ன​மாக நாக்​பூரில் உள்ள தீக்ஷா பூமி உயர்ந்து நிற்​கிறது. நாம் கண்​ணி​யத்​துட​னும், சமத்​து​வத்​துடனும் வாழ்​வதை உறுதி செய்​யும் அரசி​யலமைப்பை வழங்​கியதற்​காக டாக்​டர் பாபா​சாகேப் அம்​பேத்​கருக்கு இந்​திய தலை​முறை​யினர் எப்​போதும் நன்​றி​யுடன் இருப்​பர்.

அவர் காட்​டிய பாதை​யில்​தான் எனது அரசு எப்​போதும் நடந்து வரு​கிறது. அம்​பேத்​கர் கனவு கண்ட இந்​தி​யாவை நனவாக்க இன்​னும் அதிக உறு​திப்​பாட்​டுடன் உழைக்க வேண்​டும். அதில் நாங்​கள் இன்​னும் தீவிர​மாக உள்​ளோம் என்​பதை வலி​யுறுத்​துகிறோம்.இவ்​வாறு பிரதமர் கூறி​னார்.

 

 

 

error: Content is protected !!