கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார் செய்யப்பட்டது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொண்டார். இன்று 3வது நாளாக பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். மதியம் 2 மணிக்கு தியானத்தை முடித்த பிரதமர் மோடி பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வேஷ்டி சட்டை அணிந்து வெளியே வந்தார். பின்னர் படகு மூலம் திருவள்ளூர் சிலைக்கு சென்று அதன் பாதங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்து விட்டு சுற்றிப்பார்த்தார். பின்னர் 315 மணிக்கு படகு மூலம் வந்தார். பின்னர் விருந்தினர் மாளிகைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.
45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/மோடி-2-930x620.jpg)