பிரதமர் மோடி இன்று பிற்பகல் சரியாக2.25 மணிக்கு சென்னை வந்தார். அவர் கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில் வேக ஈனுலை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் நந்தனம் வருகிறார். அங்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசுகிறார்கள். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் பிரதமர் தெலங்கானா மாநிலம் செல்கிறார்.
