Skip to content
Home » 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய தலைமையாக இருப்பதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும், தன்னம்பிக்கையை நோக்கிய வலிமையை அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று முக்கிய போர்க்கப்பல்களை கடற்படையில் இணைப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கடற்படை தெரிவித்தது. இந்த போர்க்கப்பல்கள் விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட  நிலையில், இப்போது முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், கடற்படையின் கடல்சார் வலிமையை அதிகரிக்கத் தயாராக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.