மணிப்பூர் பிரச்னை 3 மாதமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் கூடியதில் இருந்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. மணிப்பூர் பிரச்னை பற்றி தினந்தோறும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனவே பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு இன்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். எனவே இன்று மாலை 3 மணிக்கு மக்களவைக்கு வந்தார் பிரதமர் மோடி. 4 மணி அளவில் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசுவார். நாளையுடன் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைகிறது.