சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இதற்கான விழா ஏற்பாடுகள் நடக்கிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு அவர் முதன்முறையாக தமிழகம் வர இருக்கிறார்.