ஹைதராபாத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்பு அளித்தனர். மேலும் மூத்த அமைச்சர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர் . பிரதமர் மோடி விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு
புறப்பட்டார். ரூ. 2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். உடன் கவர்னர் ஆர். என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் பார்வையிட்டனர்.