பிரதமர் மோடி ஏபிபி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். தேர்தலில் கிடைக்கும் தொகுதிகள் எவ்வளவு என்ற விவரத்தில் இருந்து நான் தள்ளியே இருப்பேன். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் தியானம் செய்வதை அதிகரிப்பேன். பிற வேலைகளையும் அதிகரிப்பேன். வாக்கு எண்ணிக்கை நாளன்று எனது அறைக்குள் நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன். என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் யாரையும் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.