நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று(ஜூன் 09) மாலை 7.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையொட்டி டில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இந்த விழாவில் பங்கேற்றார்.
பிரதமர் பதவியேற்றதை தொடர்ந்து 2தாக ராஜ்நாத்சிங், 3வதாக அமித்ஷா, 4வதாக நிதின் கட்கரி, 5வதுாக நட்டா என தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.