தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தொலைநோக்கு வணிகத் தலைவரான ரத்தன் டாடா அசாதாரண மனிதர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் பழமையான மதிப்புமிக்க நிறுவனத்திற்கு நிலையான தலைமையை வழங்கியவர் ரத்தன் டாடா. பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர் ரத்தன் டாடா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
ரத்தன் டாடா மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறையில் கலங்கரை விளக்கம் போல் உயர்ந்து விளங்கியவர் ரத்தன் டாடா. இந்திய தொழில்துறையின் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. ரத்தன் டாடா குடும்பத்தினர், டாடா குழும ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி இரங்கல்
ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டினார். ரத்தன் டாடா வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளார். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ரவி உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.