தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 தமிழ் தேர்வை தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று நடைபெற்ற மொழி பாட தேர்வில் வேலூரில் காப்பி அடித்ததாக 2 மாணவர்கள் சிக்கினர்.