சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அவரது தாய் அழைத்துச்சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்து இதுபற்றி செம்பியம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.