தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 94.56 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 99.45% தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் முதலி்டம் பிடித்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மிக குறைாவ 90.47% பேர் தேர்ச்சி வெற்று உள்ளனர். வழக்கம் போல மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதாவது 4.07% அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். 2478 பள்ளிகள் சென்டம் பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 379 என்பது குறிப்பிடத்தக்கது.