தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தேர்வு கால அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மே மாதம் 5ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை இன்று அறிவித்து உள்ளது.
