பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று சென்னை அளித்த பேட்டி வருமாறு:
வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2 பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும். ரிசல்ட் மே 9ம் தேதி வெளியிடப்படும்.
11ம் வகுப்பு தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும்.
10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறும், 11 மற்றும் 10ம் வகுப்பு ரிசல்ட் மே மாதம் 19ம் தேதி வெளியிடப்படும்.இந்த தகவலை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார்.