புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் +2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமையில்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டியும், ஆசிரியர்-மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வாயில் கூட்டம் நடத்தினர்.
அதன் பிறகு அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் தில்லையப்பன்,சங்கர் நாகராஜன், குமார், மணிமாறன் கே.ஆர்.ரமேஷ், தனபால், ஜெயராமன், சுசிலா உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.