தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு மண்டலங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. இதற்காக சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை, என அனைத்து மாவட்ட தலைநகரங்கள் உள்பட 83 முகாம்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக 46ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வரும் 13ம் தேதிக்குள் அனைத்து பாட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு விடும்.
அதைத்தொடர்ந்து மதிப்பெண்கள்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் மே மாதம் 1ம் தேதிக்குள் முடிந்து விடும். அதைத்தொடர்ந்து மே மாதம் 6ம் தேதி பிளஸ்2 ரிசல்ட் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.