Skip to content
Home » பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள்  இன்று காலை வெளியானது.  கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்.  இதில் 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.69% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் கோவை முதலிடமும்(96.02%), ஈரோடு 2ம் இடமும்(95.56%), திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.  விருதுநகர் 4ம் இடம், அரியலூர் மாவட்டம் 5ம் இடம் பிடித்துள்ளது.  வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தமிழில் 8 பேர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளனர். ஆங்கிலம் 13,  இயற்பியல் 696,  கணிதம் 779 பேர், வேதியியல் 493பேர்,   உயிரியில் 171பேர் சென்டம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!