Skip to content

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை  8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள்  இன்று தொடங்கியது. வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக சென்னை, திருச்சி  உள்பட பல்வேறு நகரங்களில் மொத்தம்  83 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்  பங்கேற்று   விடைத்தாள்களை  திருத்தும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.  விடைத்தாள் திருத்தும் பணி முடிய முடிய மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில்  பணிகள் நடப்பதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

h

h

error: Content is protected !!