பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி, பிளஸ் 1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, காலை 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திற்கான, அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையை, இன்று காலை 10:00 மணிக்கு, தங்கள் அடையாள எண், பாஸ்வேர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/பிளஸ்-1-930x620.jpg)