Skip to content

போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி
நிர்வாக இயக்குநர்  இரா.பொன்முடி தலைமையில் ஏற்கப்பட்டது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி  தலைமையில் அனைவரும் இன்று (07.02.2025) எடுத்துக்கொண்டனர். “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயக் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை குற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்பணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத்தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும். இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன் என நிர்வாக இயக்குநர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்சியில் முதன்மை நிதி அலுவலர் திரு. T.சந்தானகிருஷ்ணன், பொதுமேலாளர் திரு.S.ஸ்ரீதரன் துணை மேலாளர்கள் திரு.H.ராஜேந்திரன், திரு.K.மலர்கண்ணன், திரு.கார்த்திகேயன், திரு.ராமநாதன் உதவி மேலாளர்கள் திரு.A.தமிழ்செல்வன், திரு.N.ராஜசேகர் திரு.R. முருகன், திரு இளங்கோவன், திரு.ராஜசேகர், திரு.முகம்மது முஸ்தபா மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!