அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் புக்கா (எ) குணசீலன் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ரூபன் , ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து சந்தை தோப்பு பகுதியில் நேற்று கிட்டி புல் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த கிட்டப்புல் விளையாட்டில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மார்ட்டின் ரூபன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த குணசீலனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கழுத்து அறுபட்ட குணசீலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மார்டின் ரூபன் விருத்தாச்சலம் போவதாக செல்ஃபோன் சிக்னல் மூலம் போக்கு காட்டி விட்டு போலிசாரை திசை திருப்பி மாற்று பாதையில் தப்பித்த மார்டின் ரூபன் குன்னம் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.