இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.01.2023) சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,மேதினப் பூங்கா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 தொடங்கி வைத்து பார்வையிட்டார். சென்னை பெருநகர் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ்குமார்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்தி கேயன், இ.ஆ.ப., உ சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் ( பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் மதன் குமார், ஆகியோர் உடனிருந்தனர்.