பதினாறாவது வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணியும் மோதின. முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் வெற்றி கோப்பையுடன் அணி வீரர்கள் , பயிற்சியாளர்கள் , நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அணி நிர்வாகிகள் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து வழிபாடு நடத்தினர்.