இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச்
செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் ஜூனியர் உலக சாம்பியன் போட்டியில் வௌ்ளி பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா 4 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.