Skip to content
Home » நகர்ப்புற மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்கவேண்டும்…. தஞ்சை மாநகராட்சி துணை மேயர்…

நகர்ப்புற மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்கவேண்டும்…. தஞ்சை மாநகராட்சி துணை மேயர்…

தஞ்சாவூர் புதிய குடியிருப்பு வளாகம் மருதம் பூங்காவில் ஆதித்ய சோழன் சிலம்பம் குத்து வரிசை பயிற்சி பள்ளி தொடக்க விழா சிலம்பம் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி பள்ளியை தஞ்சை மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், பாரம்பரிய கலைகளை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறார்கள். அதை புதுப்பித்து நமது மரபு கலைகளை அனைத்து மாணவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்பயிற்சி பள்ளியில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைகம்பு வீச்சு, வாள்வீச்சு, வேல்கம்புவீச்சு, சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு, கம்பு சண்டை உள்ளிட்ட விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதை நகர்புற மாணவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இதில் தலைமை ஆசான் சோழா அய்யப்பன். தலைமை பயிற்சியாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!