திருச்சி திருவெறும்பூரில் இருந்து பெல்பூர், திருவேங்கடநகர் வரை செல்லும் சாலை 5 வருடங்களாக பேட்ச் ஒர்க் மற்றும் எந்தவித சாலை பணியும் செய்யாமல் அப்படியே சிதைந்து கிடக்கிறது , இந்த சாலை பல்லாங்குழி போல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் சென்றால் அடிக்கடி விபத்து நடப்பதுடன் இரவு நேரங்களில் இந்த சாலையில் மக்கள் தடுமாறி விழுந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
அத்துடன் இந்த சாலையில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரியாமல் அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே உடனடியாக சாலையை புதுப்பித்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நாற்று நடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குண்டும் குழியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு சாலையின் சீர்கேட்டை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதுபோல அந்த சாலையில் அதிகமாக விபத்து நடைபெறுவதை அரசு கவனத்தில் கொள்ளும் வகையில் கைகள் மற்றும் தலையில் மற்றும் கைகளில் கட்டு போட்டு சாலையில் அதிக விபத்து ஏற்படுகிறது. என்பதை உணர்த்தும் வகையில் பொதுமக்கள் கட்டுகளுடன் நடந்து வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் சுற்றியுள்ள பொதுமக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.