தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து திருச்சி பொன்மலை, திருவிக திடல், மே.க.கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக பதவியேற்ற 3 ஆண்டில் 3 வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் போநன்ற உணவு பொருள்களை
மக்களுக்கு வழங்காமல் நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒ.செயலாளர் சந்திரசேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய , நகர, பேரூர், பகுதி வட்ட, வார்டு கிளை நிர்வாகிள, சார்பு அணி நிர்வாகிகள், ஏராளான மக்கள், உள்ளாட்சி பிரிதிகள் செயல்வீரர்கள் , வீராங்கணைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.