நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல், உபி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எந்த தொகுதியை கைவிடுவது என்ற குழப்பத்திற்கிடையே வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வது என்றும் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடரவும் ராகுல் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராகுலின் சகோதரி பிரியங்கா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுலுடன் இணைந்து தீவிர பிரசரராம் செய்தார். தற்போது முதல்முறையாக வயநாடு தொகுதி எம்.பி.,பதவிக்கு போட்டியிடுகிறார்.
ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..
- by Authour
