நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இந்திய எல்லைக்குள் நேற்று இரவு கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 400 கிலோ வலைகளை அறுத்துக்கொண்டு கொள்ளையடித்து சென்றனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகளை பறிகொடுத்து வெறும் கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர். அடுத்தடுத்து தொடர்ந்து கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியும், மத்திய அரசு அதை கண்டு கொள்ளாததால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.