Skip to content
Home » பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின் … திமுக அறிக்கை!!…

பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின் … திமுக அறிக்கை!!…

  • by Authour

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர்  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரச்சார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. இதை பத்திரிகைகள் கூறுகின்றன. ஊடகங்களின் விவாதங்களிலும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரம் ஒரு பேசும் பொருளாகியது. திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தின்போது கூடியிருந்த மக்கள் “Pindrop Silence” என்பார்களே, அந்த அமைதியுடன் நின்றபடியே கேட்டு ரசித்தனர். அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் அமைதியாகக் கேட்டு கைதட்டி மகிழ்ந்தது. இறுதி வரை கலையாமல் அவருடைய பேச்சைக் கேட்டது. மற்றொரு முக்கியச் சிறப்பாக திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு எளிமையான தமிழில் அமைந்திருந்தது. அடுக்கு மொழிகள் இல்லை. ஆனால் அர்த்தம் செறிந்ததாக இருந்தது. மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆழமான சிந்தனையைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் மக்கள் ரசித்தனர். கட்டுக்கோப்புடன் கேட்டு மகிழ்ந்தனர்.

udhayanidhi

முத்தமிழறிஞர்கலைஞர் போன்றே பேசிய திரு.உதயநிதி ஸ்டாலின் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நினைவுபடுத்துவதாகவே அமைந்தது. கலைஞர் அவர்கள் எந்த ஊரில் பேசினாலும் – அந்த ஊரில் கழகம் வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த .. 2 கேட்கும் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார். அதைக் தொண்டர்கள் நம் பெயரை நினைவில் வைத்து நம்மைப்பற்றிக் கூட்டத்தில் பேசுகிறாரே தலைவர் என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள். தலைவர் கலைஞர் மீது மாறாத பாசத்துடன் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னிலும் வேகமாகத் தொடர்வார்கள். தி.மு.க. ஒரு இரும்புக்கோட்டையாகத் திகழ்வதற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் இந்தப் பேச்சுத்தன்மை ஒரு முக்கியக் காரணம். திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்தப் பிரச்சாரத்தில் காண முடிந்தது. திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சுத் தமிழிலேயே பேசினார். அந்தந்தப் பகுதிகளின் கட்சித் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைத்து உரிமையுடன் பேசினார்.

தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். தொண்டர்களும் தலைவர் கலைஞர் அவர்களைப் போலவே, தொண்டர்களுடன் நம் உதயா கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக் கொண்டார்கள். மற்ற தலைவர்களுக்கும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு திராவிட நாயகர் – கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *