Skip to content

14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசு …..

  • by Authour

தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டாக தொடங்கும். அதனைத் தொடர்ந்து பாலமேடு , புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று காலை முதல் பாலமேடு ஜல்லிக்கட்டு அங்குள்ள மஞ்சள் மலையாற்றில் சிறப்பாக நடைபெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு- 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு கார் பரிசு

விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 10 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் மூன்று பேர் என இப்போட்டியில் 40 பேர் காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி விஜயராஜை காளை முட்டியது. முதலுதவி சிகிச்சை மையத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த  காரை பரிசாக வென்றார். புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வாகி காரை பரிசாக வென்றது. சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 8 காளைகளை பிடித்த கொந்தகை பாண்டீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!