Skip to content
Home » பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…

பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு சொக்கலிங்கம் புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ்அரவிந்தர்(33). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த 10வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த இடம் அருகே வேலை பார்த்த பிலிப்பைன்ஸ், இலோகாஸ் நார்த், அப்பாயா லாவோ சிட்டி, பலோட் சைட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ(32) என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் அங்கேயே 2வருடம் ‘லிவிங் டுகெதராக’ வாழ்ந்து வந்துள்ளார். இதன்காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் தான் ‘லிவிங் டுகெதராக’ சேர்ந்து வாழ்ந்த ரமேஷ்அரவிந்தர் – ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ விற்க்கு பிறந்த ரேகா ஷிலோ என்ற 9மாத கை குழந்தையுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சொந்த ஊரான முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ரமேஷ்அரவிந்தர் வந்தார்.
இவர்களை கண்ட அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்து அரவணைத்துக்கொண்டனர். பின்னர் தங்களது வீட்டிலேயே எளிமையாக இங்குள்ள இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதன்படி சமீபத்தில்

இந்து முறைபடி தம்பதிகள் பட்டு சேலை பட்டு வேட்டி சட்டை மற்றும் மாலை அணிந்து வேதமந்திரங்கள் முழங்க தமிழக வாலிபர் ரமேஷ்அரவிந்தர் பிலிப்பைன்ஸ் பெண் ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோவின் கழுத்தில் தாலி கட்டினார். குடும்பத்தினர் ஆசீர்வாதம் செய்தனர்.
இந்தநிலையில் தமிழக கலாச்சாரமான இந்து முறைபடி திருமண சடங்குகள் செய்துக்கொண்டலும் சட்டவிதிகள்படி இருவரும் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள முடிவு செய்து முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இருவரும் தங்களது குழந்தையுடன் ரமேஷ்அரவிந்தரின் குடும்பத்துடன் வந்திருந்தனர். அங்கு தம்பதி இருவரும் கையெழுத்து போட்டு முறைபடி இருவரும் செய்துக்கொண்ட திருமணத்தை பதிவு செய்துக்கொண்டனர்.. இந்த திருமணத்தை அங்கு பணியில் இருந்த ரிஜிஸ்டர் ரவிபாலா உரிய ஆவணங்கள் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் செய்து திருமணத்தை பதிவு செய்துக்கொண்டார்.

அப்போது முறைபடி இருவருக்கும் மணமகன் ரமேஷ்அரவிந்தரின் சகோதரி அம்பிகா ரோஜாபூ மாலையினை அணிவித்து ஆசீர்வாதம் செய்தார். அங்கு இருந்தவர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கடல் கடந்து வந்த ரமேஷ்அரவிந்தரை விரும்பி *லிவிங் டுகெதராக* சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இந்தியா நாட்டில் உள்ள தமிழகம் வந்து இங்கு உள்ள முறைபடி திருமணம் செய்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இங்குள்ள கிராம சூழலை பார்க்கும்போது மகிழ்ச்சியை தருகிறது என தமிழக வாலிபரை திருமணம் செய்துக்கொண்ட பிலிப்பைன்ஸ் பெண் ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ கூறினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு கிருஸ்துவ பெண் தமிழக வாலிபரை கரம்பிடித்து இங்குவந்து இந்து காலாச்சாரம் படி திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *