அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து பிச்சனூர் கிராமம் கீழத்தெருவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் போர் பழுது காரணமாக கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வராததால் தற்காலிகமாக மாற்று போர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. போதுமான குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெட்டியார்வெட்டு ரோட்டில் சாலை
மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம் தலைமையிலான குழுவினர் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது