திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அன்னை தெரசா டிரஸ்ட்,மக்கள் பாதுகாப்பு மையம் மகாத்மா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் இன்று
நடைபெற்றது. முகாமினை அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் இயக்குனரும் மக்கள் பாதுகாப்பு மையத்தின் மாநில தலைவர் முனைவர் பிரபு முகாமினை தொடங்கி வைத்தார்.
மகாத்மா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் பவித்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் தனலட்சுமி செய்திருந்தார். முகாமில் சுற்றுவட்ட கிராம பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.